கண்காணிப்பு கேமராவைசேதப்படுத்தியவர் மீது வழக்கு

தட்டார்மடம் அருகே கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-30 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார் மடம் அருகே உள்ள முதலுர் அடையல் விஜயலட்சுமி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆனந்த் (வயது 28). இவர் முதலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 40 கண்காணிப்பு கேமராக்களை கண்காணித்து வருகிறார். இந்நிலையில் அந்தபகுதியில் நடந்த டிராக்டர் விபத்தில் ஆடு பலியானது. இந்த விபத்து தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதே ஊரைச் சேர்ந்த தேவதாசன் மகன் கிதியோன் கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த் அந்த பதிவுகளை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிதியோன் கண்காணிப்பு கேமரா ஒன்றை சேதப்படுத்தினாராம். இதை தட்டிக்கேட்ட ஆனந்தை அவர் மிரட்டிவிட்டு சென்றாரம்.

இது குறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்