குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்-ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

எஸ்.புதூர் பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-06-17 18:54 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஒன்றியக்குழு கூட்டம்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜயா குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, அங்கயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக எஸ்.புதூர் ஒன்றியம், மாந்தகுடிபட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மன்ற பொருளாக 14 தீர்மானங்கள் வைக்கப்பட்டு அதனை கூட்டம் அங்கீகரித்தது.

கண்காணிப்பு கேமரா

இதில் பொது செலவினம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு ஒப்பந்தகாரராக வள்ளியப்பன் என்பவரை தேர்ந்தெடுக்கவும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் வீரம்மாள் பழனிச்சாமி பேசுகையில் ஒன்றியத்தில் நடைபெறும் பொதுமக்கள் சார்ந்த கூட்டம், தற்போது அரசு துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முன் அறிவிப்புகள் வழங்குவதில்லை என கூறினார்.

கூட்டத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, குற்றச்செயல்களை தடுக்கவும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராஜாத்தி சிங்காரம், இந்திராகாந்தி, சத்தியமூர்த்தி, சின்னம்மாள், மென்னன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு ஒப்பந்தகாரர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்