பாலக்கோடு பகுதியில் கனமழை:அரசு ஆண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

Update: 2023-09-23 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இந்நிலையில் பாலக்கோடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனே கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்