பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல் மாவட்டத்தில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனா்.

Update: 2023-04-29 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பழக்கடைகள், மாம்பழ குடோன்கள், தர்ப்பூசணி விற்பனை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழ வகைகளை பழுக்க வைக்க கார்பைட் கற்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது 4 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் அருண் கூறுகையில், அரசு விதிமுறை மீறும் வணிகர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமை ரத்து செய்யப்படும் என்றார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதியப்படும் என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்