ரூ.11¾ லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஆட்டுப்பாக்கம் பகுதியில் சிமெண்டு சாலை பணிகளை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2022-08-07 01:44 IST

அரக்கோணம்

ஆட்டுப்பாக்கம் பகுதியில் சிமெண்டு சாலை பணிகளை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மஞ்சம்பாடி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய தெரு, அருந்ததியர் தெரு, சுடுகாடு சாலை ஆகிய இடங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு ரூ.11.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெமிலி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் ஏ.ஜி.விஜயன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஏ.வி.ரகு, ஊராட்சி மன்ற தலைவர் நித்யா ராமதாஸ், துணை தலைவர் சத்தியமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் சூர்யா, கல்பனா தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்