பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. 6-வது நாளாக காலையில் விநாயகர் பூஜை, சுப்பிரமணிய திரிசதி, மூல மந்திர ஹோமம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீப ஆராதனை நடைபெற்றது.
மாலையில் ரத்தனகிரி பாலமுருகன் கோவில் அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில், முருகர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும், இரவு சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பினர்.