ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துஅமைச்சர் ராமசந்திரன் வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ராமசந்திரன் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

Update: 2023-02-13 01:06 GMT

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ராமசந்திரன் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் தலைமையில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திட்டங்கள்

வாக்காளர்களிடம் தி.மு.க. அரசின் சாதனைகளை அமைச்சர் கா.ராமசந்திரன் விளக்கி கூறினார். குறிப்பாக இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகைக்கான புதுப்பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துக்கூறி கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரசாரத்தின்போது திருப்பூர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர செயலாளர் நாகராஜ், பகுதி செயலாளர் ராமசந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி உள்பட தி.மு.க.வினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்