முதியவரை மிரட்டிய துணை நடிகை கைது

முதியவரை மிரட்டிய துணை நடிகை கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-12 19:03 GMT

புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்தலிப் (வயது 63). திருச்சியை சேர்ந்தவர் பிரீத்தா என்கிற வீரம்மாள் (40). இவர் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முத்தலிப் மகன் தாஜூதுடன் பிரீத்தாவுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முத்தலிப்பின் வீட்டிற்குள் பிரீத்தா நுழைந்து, அவரை தகாத வார்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் முத்தலிப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பிரீத்தாவை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்