ஊர்க்காவல் படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
ஊர்க்காவல் படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திருச்சி சரகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் 17 பேர் பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் கலந்து கொண்டு அதிக புள்ளிகள் எடுத்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தனர். தீயணைப்பு பணி, 50 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். வட்டார தளபதிகளுக்கான இறகு பந்து போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட வட்டார தளபதி அழகு மணியன் 2-ம் இடத்தை பிடித்தார். மாநில அளவிலான போட்டியில் சாதனை படைத்த புதுக்கோட்டை ஊர்க்காவல் படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.