பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தீபாவளி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகளும், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு கடைகள், நகர பகுதியில் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி சி.எல்.ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், துணை போலீஸ் சுரேஷ் பாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய விதிகள் வழியாக நடந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.