மஞ்சளாறு அணையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மஞ்சளாறு அணையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-13 18:45 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி நீர்நிலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையை பார்வையிட்டார். பின்னர் அணையின் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தார். இதையடுத்து அல்லிநகரம், பெரியகுளம், ஜெயமங்கலம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்