காவல்துறை வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வு

கள்ளக்குறிச்சியில் காவல்துறை வாகனங்களை சூப்பிரண்டு ஆய்வு சீட் பெல்ட் அணிய போலீசாருக்கு உத்தரவு

Update: 2023-01-28 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர் குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும், பொது மக்களுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், திருமேனி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) இளையராஜா, ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்