சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு

குளச்சல் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-27 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக திடீரென வந்திருந்தார். முதலில் போலீஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதிவு நோட்டில் கையெழுத்திட்டார். இதையடுத்து போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பை போலீஸ் சூப்பிரண்டு ஏற்றுக்கொண்டார். அப்போது குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, குளச்சல் இன்ஸ்பெக்டர் கிரிஸ்டி ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பிறகு சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்