சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தினர் 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

Update: 2022-12-13 17:43 GMT


நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தினர் சார்பில் 73 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கேக் வெட்டி கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஆண்டுதோறும் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், முதியோர்களுக்கு வேட்டி-சேலை, ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

அதுபோல் இந்த ஆண்டும் நடிகர் ரஜினிகாந்த்தின் 73-வது பிறந்த நாளை சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். திருப்பூர் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் ரஜினிகாந்தி்ன் 73-வது பிறந்த நாளை யொட்டி 73 கிலோ எடை உள்ள பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு வழங்கி கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

சங்க கொடியேற்றம்

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் கொடியை ஏற்றினர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ரஜனிகாந்த் பொதுதொழிலாளர் சங்கத்தின் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். முருகேசன் கொடியேற்றினார். பொருளாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.

மாநகர செயலாளர் அமர்நாத் கேக் வெட்டினார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் நிர்வாகிகள் ராம்குமார், பாலமுருகன், முத்து, சுரேஷ், சண்முகம், கென்னடி, ராமநாதன், ஆட்டோ சங்கர், அசோக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆனந்த் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்