நெல்லையில் சுட்டெரித்த வெயில்; பொதுமக்கள் கடும் பாதிப்பு

நெல்லையில் சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

Update: 2022-09-14 20:17 GMT

நெல்லையில் சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

வெயில் அதிகம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 99.5 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. அதாவது ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கின்ற வெயிலை போல் நேற்றும் வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் அவதி

கடும் வெயில் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசியது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

துணியால் தலையை மூடிக்கொண்டும், முகப்பகுதியை மூடிக்கொண்டும் வாகனங்களில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. சாலையில் நடந்து சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தபடி சென்றனர். நெல்லை- மேலப் பாளையம் குறிச்சி சாலையில் நேற்று காலை கொளுத்தும் வெயிலின் போது ரோட்டில் கானல் நீர் ஓடுவதுபோல் இருந்தது.

வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்