காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி

வேடசந்தூர் அருகே காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2022-07-10 17:20 GMT

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி, ராமாநாயக்கனூர், கூவக்காபட்டி உள்ளிட்ட இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வருண பகவான் கருணை காட்டியதால், சூரியகாந்தி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த பூக்கள் உள்ளன.

சூரியகாந்தி பயிரிட்டு 80 முதல் 90 நாட்களில் மகசூல் தரக்கூடியதாகும். ஒரு ஏக்கர் பயிரிட்டால், 600 கிலோ முதல் 900 கிலோ வரை சூரியகாந்தி விதைகள் கிடைக்கின்றன. இங்கு விளைவிக்கப்படும் சூரியகாந்தி விதைகள், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சூரியகாந்தி விதைகளை வேளாண்மை துறை அலுவலகம் மூலம், விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற பல ஆண்டுகளாக கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்