மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி
கொடைரோடு அருகே மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.
கொடைரோடு அருகே உள்ள கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு 5 நாட்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியின்போது யோகா, சிலம்பம், நாடகம், ஓவியம், செஸ், கேரம், கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், பயிற்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கிரிஜா சுந்தர் நன்றி கூறினார்.