கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

அருவங்காடு நூலகத்தில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

Update: 2023-05-29 20:00 GMT

குன்னூர்

குன்னூர் அருகே அருவங்காடு கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை பள்ளி மாணவ-மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் பொருட்டு கோடை கால பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்து, சதுரங்கம், வாசிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அருவங்காடு கிளை நூலக நூலகர் ஜெயஸ்ரீ கலந்துகொண்டு பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் வாசகர் வட்ட உறுப்பினர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அருவங்காடு கிளை நூலக வாசகர் வட்டம் செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்