விருதுநகர் ராதை கிருஷ்ணர் பிரார்த்தனை மையத்தில் 6 வயது முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கோபகுடீரம் என்ற கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பஜனை, தியானம், யோகா போன்றவற்றில் பயிற்சி தரப்பட்டதுடன் கைவினைப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது. பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பிரார்த்தனை மைய பொறுப்பாளர் வெங்கடேஷ் குமார் செய்திருந்தார்.