கோடை கால விளையாட்டு போட்டி
குலசேகரன்பட்டினம் அரசு நூலகத்தில் கோடை கால விளையாட்டு போட்டி நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அரசு பொது நூலகத்தில் கோடை காலத்தை பயனுள்ளதாக மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு கோடை கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாசகர் வட்டத் தலைவர் சுடலைமணி தலைமையில் கோக்கோ, கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு குலசேகரன்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நல்நூலகர் மாதவன் செய்திருந்தார்.