நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை
நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.;
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று சுமங்கலி பூஜை நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. அப்போது சுமங்கலி பெண்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த கலசத்திற்கு அர்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களுடன் வழிபாடுநடத்தினர்.