சங்கரராமேசுவரர் கோவிலில் சுமங்கலி பூஜை
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வரலட்சுமி நோன்பு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நோன்பு அன்று திருமணமான பெண்கள், கணவன் ஆயுள், ஆரோக்கியம், தொழில் வேண்டியும், திருமண வயதில் இருக்கும் கன்னி பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் சுமங்கலி பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில், சேவாபாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சார்பில் 2007 சுமங்கலி பூஜை கோவிலில் நேற்று நடந்தது. இதில் 2007 பெண்கள் கலந்து கொண்டு வரலட்சுமி நோன்பு மந்திரங்களை உச்சரித்து கும்ப வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.