தூய்மை பணியாளர் தற்கொலை

ஆழ்வார்குறிச்சியில் தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-11 15:54 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் ஒரு வீடு ஒன்று கட்டி வந்தார். அதற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் சுமையால் மாரியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்