கடத்தி கட்டாய திருமணம் செய்ததால் தற்கொலை: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

கடத்தி கட்டாய திருமணம் செய்ததால் தற்கொலை: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-11-16 18:52 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறுமியை கடத்திய மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை படம் பிடித்தும் மிரட்டியுள்ளார். சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் மிரட்டல் தொடர்ந்ததுதான் சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதநேயமற்றவை. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்