மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை:போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சிகலெக்டரிடம் புகார்

Update: 2023-07-31 19:54 GMT

சேலம் 

மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் ஏட்டு

சேலம் மாநகர போலீசில் ஏட்டாக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 46). இவருடைய மகள் உதயதர்ஷினி (21). இவர் அழுதபடி நேற்று கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கும், ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

வரதட்சணையாக ரூ.3 லட்சம் மற்றும் நகை, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சீர்வரிசைகளை எனது பெற்றோர் வழங்கினர். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்து எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் எனது தந்தை மற்றவர்களிடம் கடன் பெற்று கணவரிடம் லட்சக்கணக்கான பணத்தை வரதட்சணையாக கொடுத்தார்.

தற்கொலை முயற்சி

இதையடுத்துவரதட்சணை கொடுக்க வாங்கிய பணத்தை தரும்படி கடன் கொடுத்தவர்கள் எனது தந்தையிடம் கேட்டுள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் என்னிடம் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த எனது தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். எனவே எனது தந்தை தற்கொலை முயற்சிக்கும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்