கடத்தூர் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை

Update: 2023-07-01 19:30 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் நியூ காலனியைச் சேர்ந்தவர் சபரிநாயகன். இவரது மனைவி அஜிதா (வயது 29). இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சபரிநாயகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அஜிதா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்