காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஅள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி லட்சுமி (வயது 53). இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக லட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்குடப்பட்டியை சேர்ந்தவர் கதிரவன் (31). விவசாயி. இவருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த கதிரவன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.