வெங்கரையில் அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-07 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் உடல் நிலை சரியாகததால் மனமுடைந்த அவர் கடந்த 6-ந் தேதி அதிக மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்