தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-05-27 21:00 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சின்னச்சாமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்