கிணற்றில் குதித்து 15 வயது சிறுமி தற்கொலை

Update: 2023-05-25 20:09 GMT

மேச்சேரி

நங்கவள்ளி அருகே கிணற்றில் குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

சிறுமி தற்கொலை

நங்கவள்ளியை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுடைய மகள் பிரியதர்ஷினி (வயது 15). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். விஜய் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் கோகிலா தனது தாய் வீட்டில் மகள் பிரியதர்ஷினி உடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பிரியதர்ஷினியிடம் வீட்டு வேலை செய்து பழகு என அவருடைய தாயார் கூறியுள்ளார். இதனால் பிரியதர்ஷினி கோபித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 6 மணி அளவில் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வழக்குப்பதிவு

அக்கம் பக்கத்தினர் நங்கவள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்