விஷம் குடித்து பட்டதாரி தற்கொலை

சேலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-24 19:58 GMT

சேலம்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). முதுகலை பட்டதாரி. வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

மேலும் செய்திகள்