கூலித்தொழிலாளி தற்கொலை

Update: 2023-05-16 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள மிலிபிக்கியை சேர்ந்தவர் ராமையா (வயது 54). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 14-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா இறந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்