கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்தி வேலூரில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன் (வயது 38). இவர் வெல்டிங் பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுசீலா (33). இவர்களுக்கு சுசீந்திரன் (8), ரோகித் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுசீலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.