சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கெலமங்கலம் அருகே சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-13 18:45 GMT

ராயக்கோட்டை

சென்ட்ரிங் தொழிலாளி

தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் தொட்டேகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை தனதுவீட்டில் தூக்குப்போட்டுதற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கெலமங்கலம் போலீசார் மஞ்சுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதற்கிடையே மஞ்சுநாத் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் வரை இழந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்