திருச்சுழி
திருச்சுழி அருகே செம்பொன்நெறிஞ்சியை சேர்ந்தவர் காளியம்மாள் மகள் பஞ்சவர்ணம் (வயது35). இவர் கடந்த கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லுாரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பஞ்சவர்ணம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.