தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டாா்;
திருப்புவனம்
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகம் மிக்கேல்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது45). ஆட்டோ டிரைவர்.. கடந்த சில நாட்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.