தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா ஆச்சுபாலம் அருகே உள்ள சத்திரம் தொட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜய் கடந்த 14-ந் தேதி தனது பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.