ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை
சங்ககிரி அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி
சங்ககிரி ஆர்.எஸ். தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது39). இவர் தனது வீட்டில் ஸ்டேசனரி மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி வசந்தலாதேவி. இந்த தம்பதிக்கு யஷ்வந்த் என்ற மகன் உள்ளான். வசந்தலாதேவி சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே நேற்று முன்தினம் மோகன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.