விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பள்ளிபாளையம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-09 18:45 GMT

பள்ளிபாளையம்

பரமத்திவேலூர் அருகே கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு ராதா என்ற மனைவியும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று காலை வெப்படை அருகே கரடு பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெப்படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரன் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்