பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2023-04-09 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). விவசாயி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் தார்பாய் கட்டும் போது லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் இடுப்பில் அடிபட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்குமார் விஷம் குடித்தார். அவரை மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்