பாப்பிரெட்டிப்பட்டி அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-04-07 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது 38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூங்கொடி ஈரோட்டில் தனது தாயாருடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாபாளையத்திற்கு வந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூங்கொடி உயிரிழந்தார். இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்