உடல் நலக்குறைவால் மகன் பலி:கையை அறுத்து இளம்பெண் தற்கொலைகடத்தூர் அருகே சோகம்

Update: 2023-04-06 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உடல் நலக்குறைவால் மகன் பலியான விரக்தியில் கையை அறுத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அத்தகூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் அனிதா (வயது 28). இவரும், தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தத்தை சேர்ந்த சேர்ந்த பாண்டியன் மகன் திலீபன் என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த காதல் தம்பதிக்கு இளங்கதிர், இளஞ்சூரியன் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்தநிலையில் இளஞ்சூரியனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் 26-ந் தேதி இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தான். அவனுடைய உடலை பார்த்து தாய் அனிதா கதறி அழுதார்.

தற்கொலை

மேலும் மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அனிதா மட்டும் வீட்டின் தனியாக இருந்தார். அப்போது அவர் மகன் இறந்த துக்கத்தில் தனது கையை அறுத்து கொண்டார். இதில் அதிகபடியான ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் இறந்த துக்கத்தில் இளம்பெண் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்