கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-30 18:45 GMT

பரமத்திவேலூர்

கூலித்தொழிலாளி

பரமத்திவேலூர் தாலுகா, மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் செல்வராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பேபி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை சமாதானம் செய்து அழைத்து வர அவர்களது மூத்த மகள் சென்றார். பின்னர் பேபியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்த போது செல்வராஜ் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாவு

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வராஜை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்