கல்லூரி மாணவர் தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-28 18:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்ரஹாரம் அருகே உள்ள நெக்குந்தியை சேர்ந்தவர் வேடி. இவரது மகன் மகேந்திரன் (வயது 18). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்தார். ஆனால் அவரது பெற்றோர் கல்லூரி சென்று படிக்குமாறு கூறினர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மகேந்திரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்