குடும்ப தகராறில் பெண் தற்கொலை
ஓசூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காமாட்சி (வயது 40). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காமாட்சி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.