கூடலூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

கூடலூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-01 17:27 GMT

கூடலூர் அருகே அப்பாச்சி பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (22). இவர்கள் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அஜித் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.

இந்தநிலையில் செல்வக்குமாருக்கும், சவுமியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சவுமியா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்