டி.வி. பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி நந்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் தனுஸ்ரீ (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தனுஸ்ரீ வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். படிக்காமல் டி.வி. பார்த்ததால், மாணவியை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனுஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு திரும்பியபோது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.