விஷம் குடித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பனந்தோப்பை சேர்ந்தவர் சித்ரா (வயது 35). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சித்ரா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.