திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

போச்சம்பள்ளி அருகே திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-11 18:45 GMT

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி அருகே திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டாயை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 22). மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். புதுச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் கீர்த்தி (22). இவருக்கு பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி வளர்ந்துள்ளார்.

இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்தியமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்