விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

அஞ்செட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-10 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 40). கூலித்தொழிலாளி. நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்